மனிதரில் இத்தனை நிறங்களா ?
பார்ட் 2
4000 மாற்றி தந்தால் 500 ரூபாய் கைக்காசு என்றவுடன் வரிந்து கட்டிக்கொண்டு வங்கிகளை நோக்கி படையெடுத்த புலிகேசிகள் ஏராளம். காலையில் ஓட்டுநர் உரிமம், மதியம் வாக்காளர் அடையாள அட்டை, சாயங்காலம் ஆதார் அட்டை என்று மாறி மாறி "உழைத்து" வங்கி பணியாளர்களின் உயிரை வாங்கினர். விரலுக்கு மை என்றவுடன் எப்படியோ அனைவரிடமும் புதிய நோட்டுக்களோ, சில்லறையோ இருந்தது.
வரிசை நீண்ட இடங்களில் நல்ல உள்ளங்களும் இருந்தன. தவித்த வாய்க்கு தண்ணீர், தேநீர் தருவதிலிருந்து, ATM செல்பவர்க்கு சவாரி இலவசம் என்று சொன்ன ரிக்க்ஷாகாரர்கள், மற்றும் உங்களிடம் சில்லரை வரும் போது பணம் கொடுக்கலாம் என்று சொன்ன சில்லறைக் கடைகள்.. அநேகம்.
காய் கறி விற்பவர்களிடம் 500 தாளை நீட்டி சில்லறை எதிர் பார்த்தவர் சிலரே. மிகப்பலர் உண்டியை உடைத்து இருந்த சில்லரையை பீராய்ந்து, இன்னும் ஒரு வாரத்துக்கு போதும் என்று பதறாமல் இருந்தவர்களே.
ஆயினும் பதற்றம் யாரையும் விட்டு வைக்கவில்லை.
பெரிசுகள் சில முந்தியத்துக்கொண்டு வங்கிகளை நோக்கி படையெடுத்தன. வங்கி ஊழியர்கள் அவர் வாழ் நாளில் காணாத கூட்டத்தை கண்டனர். இனிமேல் யாரும் தலைவர் படம் முதல் நாள் முதல் ஷோ போல என்று சொல்லவே முடியாது. தபால் நிலையம் என்று ஒன்று இருப்பதே இந்த ஈமெயில் சமுதாயத்துக்கு இப்போதுதான் தெரிய வந்தது.
கணக்கு திறந்த நாள் முதலாக zero balance காட்டிய ஜன் தன் கணக்குகள் அனைத்திலும் சரியாக 49000 மட்டுமே செலுத்தபட்டிருந்தன.
வானம் பார்த்த பூமி .. வெள்ளாமையே இல்லே என்று உதட்டை பிதுக்கிய விவசாயிகளின் வங்கி கணக்குகளில் எப்படியோ கடந்த இரண்டு வாரங்களில் நல்ல மகசூல்.
மறந்து போன பல சொந்தங்கள் இப்போதுதான் நினைவுக்கு வந்தது. அரசு பான் அட்டைக்கு விண்ணப்பம் போட சொன்னது மழுங்கிய மண்டைகளில் திடீரென உரைத்தது. பான் அட்டையும் வங்கி கணக்கும் இருந்த குடும்பத்தினர் அனைவரும் ஓவர் நைட் லட்சாதிபதி ஆனார்கள் (சரியாக 2.5 லட்சம் மட்டுமே).
மொட்டை தொலை பேசி அழைப்புகள் ஏராளம். உங்களிடம் கருப்பு பணம் இருந்தால் 30% கமிஷனுக்கு மாற்றி தருகிறோம் என்று. ஐயா இல்லை என்று சொன்னால், நீங்கள் ஓகே என்று சொன்னால் உங்கள் அக்கௌன்ட்டில் கொஞ்சம் பணம் போட முடியுமா ? ஒரு சில மாதங்களில் திரும்ப எடுத்து விடலாம் .. என்பது போல ...
மழை நீர் செல்வதற்காக உருவாக்கப்பட்ட வடிகால்களில் 500 மற்றும் 1000 நோட்டுகள் மிதந்தன... சில பல இடங்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் எரிக்கப்பட்டது என்று புரளி கிளப்பினார்கள். கள்ள நோட்டாக இருந்திருக்க வேண்டும்.
வங்கி ஊழியர்களில் சிலர் தங்கள் ஊழ்வினைப் பயனை நொந்து கொண்டு பணியாற்றினர். நாட்றம்பள்ளியில் வங்கி மேளாலரின் சமஸ்க்ரித பாண்டித்யம் வெளிப்பட்டது. வீட்டில் காலை உணவு உப்புமாவா.. பொங்கலா என்று தெரியவில்லை ..கெட்ட வார்த்தை பேசுவது உங்களுக்கு மட்டும்தான் தெரியுமா ? நாங்களும் பேசுவோமில்லே என்று விளாசி தள்ளினார். வீட்டில் காலை உணவு உப்புமாவா.. பொங்கலா என்று தெரியவில்லை .. அதையும் வீடியோ பிடித்து ஊடகத்தில் போட்டனர். எதற்கு லைக் போடுவது என்று விவஸ்தை இல்லாமல் எல்லாத்துக்கும் போட்டு தள்ளினர். வங்கி சேவகர்களின் சீரிய பணியை மெச்சி பூக்கொத்து அளித்த காணொளியும் இதில் சேர்த்தி...


0 Comments:
Post a Comment
<< Home