மனிதரில் இத்தனை நிறங்களா ?
பார்ட் 3
சுங்கச் சாவடியில் 500 ரூபாய் நோட்டை நீட்டி சில்லரை கேட்டவர்களுக்கு நாணயமான மூட்டை கிடைத்தது, நெரிசல் தாங்காமல் சுங்கம் தவிர்த்தது அரசு ..
23 ATM சென்று பணம் எடுக்க முயன்ற கஜினி முஹம்மதுவின் வீடியோ தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்பட்டது. இதுவே அடுத்த இரண்டு நாட்களுக்கு ஊடகங்களில் replay செய்யப்பட்டது. அலுவலகம் செல்ல இருப்பதிலேயே அதிக தூரம் என்று சொல்லப்படும் வழியை கடந்த ஒரு வாரமாக நான் உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறே ன். வழியில் உள்ள வங்கிகளையும் ATMகளையும் கடந்து சென்றால் நிலவரம் என்ன என்று தெரியும் அல்லவா. முதல் ஒரு வாரம் ரேஷன் கடையில் சர்க்கரை போட்டது போல் இருந்தது. பிறகு மெதுவாக பிசு பிசுக்க ஆரம்பித்தது. ஐந்தில் இரண்டு ATMகள் 2000 ரூபாய் கக்கிக்கொண்டுதான் இருந்தது. வெளியில் அறிவிப்பும் இருந்தது. 100 ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பரவலாக இருந்தது என்னவோ உண்மை.
கருப்பு பணம் இருப்பவன் எவனும் வரிசையில் நிற்கவில்லையே என்ற கேள்வி வேறு.. அவ்வளவு பணத்தையெல்லாம் வச்சுக்கிட்டு வரிசையில் நிற்க முடியாது பாஸ். இதெல்லாம் போதாதென்று பப்பு 4000 ரூபாய் பெற்றுக்கொள்ள வாங்கி செல்வதாக ஒரு photo ops ஈடேற்றினார். அன்னாரின் சிக்கனத்தை மெச்சி "சிக்கன சிகாமணி" என்று பட்டம் வழங்குவோமா ?
பிரதமரின் தாயார் வரிசையில் நின்று நோட்டு மாற்றினார் என்று ஒரு பக்க propaganda. இன்னொரு பக்கம் அவ்வளவு வயதான அம்மையாரை வரிசையில் நிறுத்திய கொடூரன் என்ற விமர்சனம் இன்னொரு பக்கம். முன்னால் போனால் முட்டுவதும் பின்னால் போனால் உதைப்பதும் நாம் பார்த்து பழகியதுதானே ..
2000 ரூபாய் நோட்டை தண்ணீரில் முக்கினால் கலர் போகுமா போகாதா என்ற ஆராய்ச்சிக் காணொளி வைரலாக பரவியது. இது என்ன வியாதி என்று தெரியவில்லை. பணம் கிடைக்கவில்லை என்று ஒரு பக்கம் ஒப்பாரி.. இன்னொரு பக்கம் தேவநகரி உபயோகப்படுத்தப்பட்டது தவறு என்று வழக்கு, வியாஜ்யம். தாய் மொழி மறந்து ஆங்கிலத்தில் புரண்டு கொண்டிருக்கும் கான்வென்ட் படிப்பாளிகள் திடீரென இரண்டு ஆயிரம் என்று 3 மொழிகளில் தவறாக பதிக்க பட்டிருக்கிறது என்று கூறி நக்கீரர்களானார்கள்.
Misprint என்று கூறப்படும் நோட்டுகள் ebay எனப்படும் விற்பனை தளத்தில் கொள்ளை விலை கொடுத்து வாங்கும் அதே மக்கள் பிழை உள்ள நோட்டுக்களை போட்டோ பிடித்து ஊடகங்களில் போட்டு தள்ளினர். நோட்டு அச்சடிக்கும் இடத்தில வேலை செய்பபவனும் மனிதன்தானே என்று விட்டு வைக்கவில்லை. இந்த மாபெரும் அறிவுப்பு வெளி வருவதற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னரே 2000 ரூபாயின் மின் பிம்பங்கள் வாட்சப்பில் பரவியது. வயிற்றுப்போக்குக்கு மாத்திரை கொடுப்பது போல நானோ GPS புரளி.
இல்லை ..ஆனால் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தசாவதாரம் வசனம் வேறு..
அறிவிப்பு வெளி வந்த நாள் முதலாக இறந்தவர் அனைவரும் வரிசையில் நின்று இருந்ததாகவே கணக்கு எழுதப்பட்டது. தொலைக்காட்சி நிறுவனங்கள் திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்து பேச சொன்னது போலவே பொது மக்கள் பேசினார். அடிக்கடி கேமெராவை பார்த்து, "என்ன, நான் சரியா பேசுறேனா ?" என்று சாடையில் கேட்பது வேடிக்கையாக இருந்தது. தமிழில் பார்டர் மார்க் வாங்கி பாஸ் செய்த மக்களெல்லாம் செந்தமிழ் பேசும்போதே தெரியாதா ? எழுதிக்கொடுத்து படிக்கிறாரகள் என்று..
தராதரம் இன்றி பிரதமரை தொலைக்காட்சியில் வைதவர்கள் சிலர். சு. சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது முன் வரிசையில் அமர்ந்து பிறப்புறுப்பை காட்டிய கண்ணியமான மாந்தரவல்லவா நாம்..
திருமணங்களுக்கு இரண்டரை இலட்சம் வரை வங்கிகளில் பணம் எடுக்கலாம் என்று சொன்னவுடன் போலி வரவேற்ப்பிதழ்கள் நீட்டப்பட்டன.
எது எப்படியோ MEME எனப்படும் சிரிப்பு சித்திரங்கள் மக்களின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தின. "இடுக்கண் வருங்கால் நகுக" என்று படித்தவர்களல்லவா நாம்..யாரையும் விட்டு வைக்கவில்லை.
IIT Kharagpur எனும் மாபெரும் கல்வி நிறுவனத்தின் மேலிருந்த மரியாதை தரை மட்டமாகியது. முதல்வன் திரைப்படத்தில் வந்தது போல அவதார புருஷன் கிடைத்தான் என்று நினைத்த தில்லிவாசிகள் மண் கவ்வினர். IRS என்ற அரசு எந்திரத்தின் மேலான பெரு மதிப்பும் மண்ணாகியது. இதற்கு படிக்காத அரசியல்வாதியே மேல் என்ற வெறுப்பு எஞ்சுகிறது.


0 Comments:
Post a Comment
<< Home