மனிதரில் இத்தனை நிறங்களா ?
பார்ட் 4
இது நாள் வரை எதிரும் புதிருமாய் இருந்த கட்சிகளெல்லாம் "பொது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க" ஒன்று கூடினர். மகிழ்ச்சி ! ஆளும்கட்சியினர் இஞ்சி தின்ற குரங்கு போலாயினர். ஆங்கிலத்தில் Catch 22 என்பர். Damned if you do and damned if you dont. There are no virgins in a maternity ward.. you know. அரசியல் அரிசியல் ஆனது.
அரசியல்வாதிகள் கல்வி நிறுவனங்களை அமைத்த போதே அதன் பின்னணி தெரியாதா.. பணம் ஒன்றே குறி. காசு கொடுத்து பட்டம் வாங்கியதால் விளைந்த விபரீதத்திற்கு மௌலிவாக்கம் ஒன்றே போதும்.
சினிமா நடிகர்கள் விதி விலக்கல்ல. "சத்தியமேவ ஜயதே" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த பெருமகன் இப்போது எங்கே ? பாலிவுட்டின் முதல் குடும்பம் எங்கே ? மற்ற தென்னிந்திய நடிகர்கள் எங்கே ?
பேசா மடந்தை என்று புகழ் பெற்ற முன்னாள் பிரதமர் பேசினார். அது சரி .. உழும் காலத்தில் உறங்கிவிட்டு அறுவடை காலத்தில் புலம்பியது போல ..எல்லாம் சரி .. அவர்கள் ஆண்ட போது பெரும்பாலான கிராமங்களில் வங்கிகளோ, ATM களோ இல்லை என்பது தெரியாதா ? இப்போதுதான் தெரிய வருவது போல தாக்கி தள்ளி விட்டார்கள். விதண்டாவாதி என்று பெயர் பெற்ற Arnab முதல் முறையாக தெளிவுடன் பேசிய போது ஆளுங்கட்சியின் கைப்பாவை என்றாகியது. மற்ற தொலைக்காட்சிகள் மட்டும் என்ன நடு நிலையா ?
எதிர் கட்சியில் இரண்டு முன்னாள் நிதி அமைச்சர்கள், ஜனாதிபதியே ஒரு முன்னாள் நிதி அமைச்சர். ஆளுங்கட்சியில் ஒருவர் என்று.. இதை விட நல்ல வியூகம் வேறு எப்போது கிடைக்கும். ஆக்கமுள்ள விவாதம் நடைபெறும் என்று பார்த்தால் குழாயடி சண்டையாக்கி விட்டீர்களே. பேப்பரை எறிந்து, கூச்சலிட்டு .. அடுத்த தலைமுறைக்கு உங்கள் நடத்தை முன் உதாரணமல்லவா..
கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை என்று நாடு தழுவிய பந்த் வருகிற 28ம் தேதியன்று என்று கூவல். கூலிப்படைக்கு கொடுக்க வேண்டிய குவார்ட்டரும், கோழி பிரியாணி பொட்டலமும் சும்மா வருமா பாஸ் ? உடனடியாக பல்டி .. மூன்று நாட்களில் வாபஸ் .. இல்லையேல் பின் விளைவுகள் .. 3 நாள் ஆச்சு பாஸ் ..
ஊரை அடித்து உலையில் போட்டது போல கிங் பிஷர் சீமானின் கடன் தள்ளுபடி. யார் பணம் ? யார் தள்ளுபடி செய்வது ? விவசாயக்கடன் வாங்கியவனை தற்கொலைக்கு தள்ளி விட்டு, தண்ணி வண்டி ஒட்டிய பெருமானுக்கு விடுதலை. ஜப்தி செய்த சொத்துகள் ஏலம் விடப்பட்டனவா என்றால் .. இல்லை .. கல்விக்கடன் கட்ட முடியாத தந்தைக்கு இழிவு ..
All animals are equal .. Some animals are more equal ..


0 Comments:
Post a Comment
<< Home