Modesty - Primer
பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் ஒரு நண்பன்.. மூர்த்தி .. இன்று அவனில்லை .. அவன் நினைவுகள் மட்டுமே நிழலாடுகின்றன ..
Middle School தாண்டி High ஸ்கூல் சேர்ந்த வருடமென்று நினைவு (1975 / 1976). வெளி உலகம் சற்றே தெரிய ஆரம்பித்தது. பாட்டியிடம் கதை கேட்டு தூங்கி பழக்கம். திரும்ப திரும்ப கேட்ட கதையாகவே இருந்தாலும் போரடித்ததில்லை .. என்னுள் Moral Values வளர்வதற்கு இந்த கதை கேட்கும் பழக்கமே என்று நம்புகிறேன்.
ராஜாஜியின் "சக்கரவர்த்தி திருமகனும்", "வ்யாஸர் விருந்தும்" படிக்க ஆரம்பித்த பிராயம். "இரும்புக்கை மாயாவி"யும் "லாரென்ஸ் டேவிட்"டும் தெரிய வந்த காலம்.
அழிவு கொலை தீமை கழகம் உண்மையென்று நம்பிய காலம். நல்லவர்களை காப்பாற்ற "வேதாளரும்" "மாண்ட்ரேக்கும்" வருவார்களென்று நம்பிக்கை. நல்லவை மற்றும் அல்லாதவைகளை தெரிந்து கொள்ள ஆரம்பித்த பருவம்.
அப்போதுதான் இந்த "கழுகுமலைக் கோட்டை" அறிமுகமாயிற்று. பெண்களிலும் ஜேம்ஸ் பாண்ட் உண்டென்று தெரிவித்தது இந்த சித்திரக்கதை. மட்டமான சாணிக்காகிதமாக இருந்தாலும் அன்று இது ஒரு வித்யாசமான கிளுகிளுப்பை உண்டாக்கியது. பிற்காலத்தில்தான் "Axa"வெல்லாம்
இதன் பாதிப்பு என்னவென்று அடுத்து பதிகிறேன்


0 Comments:
Post a Comment
<< Home